Saturday, June 18, 2011

ஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம்! சீமான் பரபரப்பு பேச்சு!!



  • தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிற்கு நடிகர் விஜய்தான் காரணம் என்று டைரக்டரும், நாம் தமிழர் கட்சித்தலைவருமான சீமான் சீரியஸாக பேசி காமெடி செய்துள்ளார். பெப்ஸி விஜயன் மகன் சபரீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் மார்க்கண்டேயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் விஜய் மற்றும் சல்மான்கான், டைரக்டர் சீமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விஜயலட்சுமி விவகாரத்தில் சிக்கியிருக்கும் டைரக்டர் சீமான் பேசுவதற்காக மைக்கை பிடித்ததும், விழாவுக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் சீரியஸாக கேட்க ஆரம்பித்த‌னர். ஆனால் சீமானோ காமெடியாக பேசினார். அதிலும் நடிகர் விஜய் பற்றிய பேசிய பேச்சை கேட்டதும் அரங்கத்தினுள் ஒரே கிச்சு கிச்சு. சீமான் பேசும்போது, தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே வழி வகுத்தது, என்றார்.

தேர்தல் நேரத்தில் வெளிப்படையாக பிரச்சாரம் செய்ய தயங்கி, தனது அப்பாவை தேர்தல் களத்திற்கு அனுப்பி வைத்தவர் விஜய். அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் அறிக்கை தர மாட்டார்; பேட்டி கொடுக்க மாட்டார் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே இரு மாதங்களுக்கு முன்பு பலமுறை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதேப்போலவே விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததே தவிர விஜய் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தேர்தலுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கக் கூட மறுத்துவிட்ட விஜய், ஜெயித்த பிறகு சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை இப்படியிருக்க... டைரக்டர் சீமானோ... ஆட்சி மாற்றத்திற்கு விஜய்தான் காரணம் என்று பேசியிருப்பது... அதுவும் ரொம்பவே சீரியஸாக பேசியிருப்பது சரியா? தவறா? என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.

Thursday, June 2, 2011

யோகாகுரு பாபா ராம்தேவ்-ஆயிரத்து நூறு கோடிகளுக்கு அதிபதி

பாவப்பட்ட கோடீஸ்வரன்!

பாபா ராம்தேவ் யார் இவர்?பிறந்தது ஹரியனாவில் உள்ள மகீன்றகர் மாவட்டத்தில் எழுதப்படிக்க தெரியாத ராம் நிவாஸ் யாதவ்,குலாப் தேவி,தம்பதிகளின் விவசாய குடும்பத்தில் ராம கிருஷ்ணா பாபாவாக பிறந்து,எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து,சமஸ்கிருதமும்,யோகாவும் படித்து,சந்யஷியஹா மாறி,இன்று ஆயிரத்து நூறு கோடிகளுக்கு அதிபதியாகவும்,கொலை காரர்களின் கூடாரமாகிய ஆர் எஸ் எஸ் இன் யோக அசாரியனுமாகவும் மாறி.பாபா ராம் தேவாக உருமாறியிருக்கிறார்.ஏழை குடும்பத்தில் பிறந்த இவருக்கு இன்று உலகம் முழுவதும் தெரியக்கூடிய அஸ்தா டிவி சொந்தமாக உள்ளது.ஒற்றைக்கு இருந்து தியானம் செய்வதற்கு ஸ்க்வாட்லாண்டில் உள்ள கும்ப்ரை என்ற தீவை ரெண்டு மில்லியன் பவுண்டிற்கு சொந்தமாக வாங்கிவுள்ளார்.இதோல்லாமல் நாற்பதுக்கு மேற்பட்ட யோக கேந்திரங்கள்,ஐநூறு படுக்கைகள் கொண்ட மல்டி ச்பெசியலிஸ்ட் ஹோஸ்பிடல்கள்,யோக ரீசெர்ச் சென்டர்,ஆயுர்வேத காலேஜ்,ஆயுர்வேத மருந்து தொழிற்சாலை,ஏக்கர் கணக்கில் தோட்டங்கள்,இது ஒரு பக்கம் என்றால் இவர் பயணம் செய்வது எல்லாம் சார்ட்டர் விமானத்திலும்,ஹெளிகொப்டேரிலும்,மட்டும்தான்!இவருடைய கம்பனிகளில் தயாரிக்க கூடிய மருந்துகளில் மனிதர்களுடைய எலும்புகளின் பாகங்கள் காணப்டுவதாக லேப் ரிப்போடுடன் கூடிய கம்ப்ளைன்ட் கடிதத்தை,சி பி எம் உடைய பொலிட் பீரோ அங்கமான விருந்தா கராத் பிரதமருக்கும்,ஜனாதிபதிக்கும்,அனுப்பி உள்ளார்.இவருடைய பார்மஷிகள் மூலமாக எயிட்ஸ்,கான்செர்,போன்ற நோய்களுக்கு மருந்து தருவதாக கூறி மக்களை ஏமாற்ரிவுள்ளர்.யோக மூலமாக இந்த நோய்களை மாற்றலாம் என்று இவருடைய பிரசாரதிர்ருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்திய ஆரோக்கிய மந்திராலயம் நடவடிக்கை தொடக்கியபோது இவர் இது நான் அப்படி சொல்லவே இல்லை என்று மழுப்பிவிட்டார்.படிக்ககூட வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்த இவருக்கு இவள்ளவு சொத்துக்கள் எங்கிருந்து வந்தது என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று அகில் பாரதிய அகண்ட பரிசத் என்ற இயக்கம் பிரதமருக்கும்,ஜனாதிபதிக்கும்,கோரிக்கை வைத்துள்ளார்கள்.இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புக்கு காரணம் ஹிந்து பயங்கரவாதிகள் தான் என்பது தெரிந்த உடன் பகிரங்கமாக அதை மறுத்து அறிக்கை வெளிவிட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் பாங்கில் உள்ள கள்ளபணத்தை வெளி கொண்டு வரும் நடவடிக்கையே தள்ளி வைத்து விட்டு இந்த சங் பரிவார சாமியார்களிடம் இருக்கும் கள்ள பணத்தை வெளி கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேச விரும்பிகள் எதிர் பார்க்கிறார்கள்.

பாவப்பட்ட இந்த கோடீஸ்வரன் தான் லஞ்சத்தை ஒழிக்க அன்ன ஹசாரே வின் மாடலில் ரங்க பிரவேசம் செய்ய போகிறாராம் !
என்று தான் மாறுமோ?நம் தேசம்!

இனியாவது கரண்ட் கிடைக்குமா?

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் மின்தடையில்லா தமிழகம்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

திண்டுக்கல்: இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் மின்தடையே இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார் என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திண்டுக்கலில் மின்துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் காற்றாலை உற்பத்தியின் மூலம் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கின்றது. இந்த மின்சாரம் காற்றின் அளவை பொறுத்து அதிகரிக்கும். இந்த மின்சாரத்தை ஒரு யூனிட் 3.39 ரூபாய்க்கு வாங்குகிறோம்.

கடந்த ஆட்சியில் மின்துறையில் உள் கட்டமைப்பு வசதிகள் சரியில்லை. இதனால் மின்சாரத்தை சீராக தர முடியவில்லை. தற்போது உள் கட்டமைப்பு வசதிகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் மின்தடையே இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் சோலார் மின் உற்பத்தி திட்டம் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதில் சோலார் மின்உற்பத்தி செய்ய தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் திட்டமும் அரசின் கைவசம் உள்ளது என்றார்.

உங்களின் ஆதரவுகள்

ஒரே ஒரு மிஸ்டு கால் ?

நண்பர்கள் கவனத்திற்கு

அன்னா ஹாசரே மூலம் லஞ்சம் ஊழலுக்கு முடிவு கட்ட இப்போது சற்று மேலே வந்து கொண்டிருக்கும் லோக்பால் மசோதா தாக்கல் செய்ய வேண்டுமென்றால் 25 லட்சம் மக்களின் ஆதரவு தேவை என்ற புதிய குண்டு ஒன்றை இந்திய அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

இதற்காக ஒரு தொலைபேசி எண் மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்.+91 22 615 50 789 . இந்த எண் மூலம் நீங்கள் ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். மேலும் இந்த அழைப்புக்கு கட்டணம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (டோல் ப்ரி)

உங்கள் அழைப்பு சென்றதும் உங்கள் ஆதரவு எடுத்துக் கொள்ளப்பட்டது என்ற குறுஞ்செய்தி உங்கள் கைபேசிக்கு வந்துவிடும்.

இதன் தொடர்பான வலைதளம் www.indiaagainstcorrupiton.org

எந்த நாட்டில் இருந்தாலும் உங்கள் ஆதரவை இந்த கைபேசி எண்ணுக்கு அனுப்பலாம் 09212472681

நண்பர்கள் இந்த செய்தியை பரவலாக்கம் செய்தால் நலம்

Wednesday, June 1, 2011

குளு குளு குற்றாலம்








வலை தல நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்.நான் வலை தளத்திற்கு புதுமுகம் குறைகள் இருந்தால் மன்னிக்கவும்.நான் தற்போது நெல்லை மாவட்டதில் உள்ள குற்றாலம் அருகில் இருக்கிறேன்.தமிழ்நாட்டில் இங்கு உள்ள பருவநிலை போல் வேறு எங்கும் அமையாது.தூய்மையான காற்று வேறு எங்கும் கிடைக்காது.தற்போது குற்றாலத்தில் சீசன் தொடங்கி உள்ளது.
குற்றாலம் தென்காசியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே (86 கிலோமீட்டர்) அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். தென்காசி தொடர்வண்டி நிலையம் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையமாகும்.

தென் மேற்கு பருவ மழை ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழுத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.
குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.

1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.

2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

5. ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)- இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.


7. புலி அருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு பாசுபத சாஸ்தா அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 4 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. சுமார் 100 அடி உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது.
9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது.

படித்ததில் பிடித்தது

கிரிக்கெட் வரலாறு

( இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை)



நாடெங்கும் கிரிக்கெட் ஜூரம் ஏறிக் கிடக்கும் சூழல் இது. வீடுகளின் முன்னால், தண்ணீர் இல்லாத குளங்களில், சாலை ஓரங்களில், பள்ளிக்கூட வளாகங்களில், சந்துகளில் எல்லா இடங்களிலும் இந்த விளையாட்டை சிறுவர்களும் இளைஞர்களும் ஆர்வமுடன் விளையாடுவதைப் பார்க்கலாம். உலக அளவிலேயே இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு சற்று அதிகப்படியான ஆர்வத்துடன் ரசிக்கப்படுகிறது.

பொழுது போக்கிற்காக இங்கிலாந்திலுள்ள ஆடுமேய்ப்பர்கள் ஆரம்பித்த விளையாட்டே கிரிக்கெட் விளையாட்டு என்று நம்பப்படுகிறது. வாசல்கதவின் முன்னால் ஆடுமேய்ப்பவர் ஒருவர் நிற்க, இன்னொருவர் கல்லை அவரை நோக்கி எறிய குச்சியால் கல்லை அடித்து விளையாடும் விளையாட்டாகத் தான் கிரிக்கெட் ஆரம்பமாகியிருக்கிறது. ஆடுகளை மேய விட்டுக்கொண்டு இடையர்கள் குச்சிகளை வைத்து விளையாடத் துவங்கிய கிராமிய விளையாட்டான கிரிக்கெட் அதன் பின் பல இடங்களுக்கும் பரவி இன்று உலகெங்கும் பரவிவிட்டது.

உலகெங்கும் கோடிக்கணக்கான வருவாயை ஈட்டும் இந்த கிரிக்கெட் விளையாட்டு நிகழ்ச்சியை நடத்த அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் கடும் போட்டியிருகின்றன. காரணம் இதன் மூலம் கிடைக்கும் வருவாய் ! சாதாரணமாக ஆட்டிடையர்கள் ஆரம்பித்த விலையாட்டு இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் விளையாட்டாய் மாறியிருக்கும் வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்த்தால் பல ஆச்சரியங்கள் நமக்கு முன்னால் விரிகின்றன.

கிரிக்கெட் விளையாட்டைக் குறித்து கிடைத்திருக்கும் மிகப் பழமையான குறிப்பு 1598ம் சேர்ந்தது என்கிறார் பீட்டர் வின் தாமஸ். இதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டின் தொன்மையை ஓரளவு கணிக்க முடிகிறது. எனினும் பதினேழாம் நூற்றாண்டுகளில் தான் இது பரவலாக ஒரு விளையாட்டாக விளையாடப்பட்டிருக்க வேண்டும் என்பது பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல குறிப்புகளின் மூலம் தெரிய வருகிறது.

1760களில் கிரிக்கெட் விளையாட்டுக்கான முதல் மன்றம் ஹாம்ஷயர் மாவட்டத்திலுள்ள ஹாமில்டனில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே கிரிக்கெட் விளையாட்டுக்காக ஆரம்பிக்கப் பட்ட முதல் மன்றம் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த மன்றமே கிரிக்கெட் என்னும் விளையாட்டு ஒருவித அங்கீகாரத்துக்குட்பட்ட ஒரு விளையாட்டாக அறியப்படக் காரணமாயிற்று.

இந்த ஹாமில்டன் மன்றமே பந்துவீச்சாளர், மட்டையாளர்களுக்கான நுட்பங்கள், மற்றும் விதிமுறைகளை ஆரம்பித்து வைத்தது. இந்த மன்றத்தினர் வகுத்த விதிமுறைகளே பல ஆண்டுகள் இந்த விளையாட்டின் முதுகெலும்பாக இருந்தன.

அதன் பின்னர் கிரிக்கெட் விளையாட்டின் அதிகார மையம் மாறியது. லண்டனிலுள்ள லாட்ஸ் மைதானத்தைத் தலைமிடமாகக் கொண்டு 1787ல் மேலிபோன் மன்றம் எனும் பெயரில் ஒரு மன்றம் இயங்கத் துவங்கியது. இந்த மன்றம் ஹாமில்டன் மன்றத்திடமிருந்து அதிகாரத்தையும், தலைமையையும் பெற்றுக் கொண்டது. இப்போது கிரிக்கெட் விளையாட்டுக்கு லாட்ஸ் மைதானம் தலைமையிடமானது.

இந்த எம்.சி.சி என்று அழைக்கப்படும் மெலிபோன் கிரிக்கெட் மன்றம் மிகவும் அதிகாரம் வாய்ந்ததா செயல்பட்டு வந்தது. இன்று வரை கிரிக்கெட் சட்டங்களை அந்த மன்றமே காப்புரிமை பெற்று தக்க வைத்துக் கொண்டுள்ளது. எனவே இன்றும் கூட ஏதேனும் திருத்தம் கிரிக்கெட் விதிமுறைகளில் செய்ய வேண்டுமெனில் அது எம்.சி.சி மூலமாகத் தான் செய்ய வேண்டும். இந்த எம்.சி.சி யே 1967 வரை இங்கிலாந்து கிரிக்கெட்டையும், உலக அளவிலான கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தி வந்தது.

கிரிக்கெட் விளையாட்டின் முதல் நாயகனாக இங்கிலாந்தின் டபிள்யூ.ஜி.கிரேஸ் என்பவரைக் குறிப்பிடுகிறார்கள். 1800ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆட்டக்காரராக இருந்த அவர் பல்வேறு திருத்தங்களை கிரிக்கெட் விளையாட்டில் செய்தார். தற்போதைய கிரிக்கெட் விளையாட்டின் துவக்கம் அவரே. அக்காலத்தில் இங்கிலாந்தின் அரச குடும்பத்தினருக்கு அடுத்தபடியாக அனைவரும் அறிந்த நபராக இவர் இருந்தார் என்பதே இவருடைய புகழை வெளிப்படுத்தும்.

அதன்பின்னர் ஆஸ்திரேலியா நாட்டிலும் கிரிக்கெட் விளையாட்டு ஆரம்பித்தது. ஆஸ்திரேலியா ஏராளம் உள்ளூர் போட்டிகளை நடத்திக் கொண்டிருந்தது. அதன் பின்னர் இங்கிலாந்து அணி 1877ல் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்து அங்குள்ள மெல்போர்ன் விளையாட்டு அரங்கில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. இதுவே உலகில் நடைபெற்ற முதல் அதிகார பூர்வமான டெஸ்ட் போட்டி.

1877ம் ஆண்டு நிகழ்ந்த அந்தப் போட்டியில் இங்கிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆண்டுகள் நூறு கடந்தன. 1977ம் ஆண்டும் அதே இரு அணிகளும் அதே மைதானத்தில் மோதின. இப்போதும் வென்றது ஆஸ்திரேலியா அணி தான். அதுவும் அதே 45 ரன்கள் வித்தியாசத்தில் ! இந்த பரபரப்பான் அபோட்டியே ஆஷர் தொடர் என்று அழைக்கப்பட்டது. இதுவே இன்றைய உலகக் கோப்பைக் கிரிக்கெட்டின் ஆரம்பம் எனலாம்.

பிரிட்டிஷ் ஆட்சி செய்த நாடுகளிலெல்லாம் கிரிக்கெட் விளையாட்டு விளையாடப்பட்டது. இந்தியாவிலுள்ள ராணுவ வீரர்கள் கூட இந்த விளையாட்டை விளையாடிய வரலாறு உள்ளது. இவ்வாறு பிரிட்டிஷ் மக்களால் உலகின் பல பாகங்களுக்கும் இந்த விளையாட்டு பரவியது. அதுவரை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கின.

1721 – பிரிட்டிஷ் மக்கள் முப்பையில் வந்த ஆண்டுகளிலேயே கிரிக்கெட் விளையாடப்பட்டதற்கான குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் போன்ற நாடுகளில் பிரிட்டிஷ் மக்கள் கிரிக்கெட் விளையாட்டை கற்றுக் கொடுத்தபின் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளின் கிரிக்கெட் ஆதிக்கம் தளர்ந்தது. இந்தியாவை பிரிட்டிஷ் மக்கள் ஆட்சி செய்து வந்ததால் அந்த கால கட்டத்திலேயே இங்கிலாந்து மக்களை வெற்றி பெற வேண்டும் எனும் வேட்கை இந்தியர்கள் மனதில் அதிகமாய் இருந்ததில் வியப்பில்லை.

இந்திய அணியின் முதல் வெளிநாட்டுப் பயணம் 1932ல் நிகழ்ந்தது. அப்போது தான் இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் தகுதி வழங்கப்பட்டது. இங்கிலாதுடனான விளையாட்டுக்காக அந்த அணி லண்டன் சென்றது. இதுவே டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் முதல் வெளிநாட்டுப் பயணம்.

1950 களில் உலகின் மிகப்பெரிய அணியாக இருந்தது இங்கிலாந்து அதன் பின்னர் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் முன்னணிக்கு வந்தன. இங்கிலாந்தின் அதிகாரமும், ஆதிக்கமும் பிற நாடுகளின் வரவால் குறைந்தன.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட்டில் மிக உயரிய இடத்தை முன்பே அடைந்து விட்டிருந்தது. உலகமே வியக்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரரான டான் பிராட்மேன் – ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் தான். அன்றைய நாட்களில் இங்கிலாந்து அரச குடும்பத்துக்குப் பிறகு உலக அளவில் தெரியப்பட்ட ஒரு மனிதராக இவர் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இவருடைய டெஸ்ட் சராசரி சுமார் 99.94.

டான் பிராட்மேன் களத்தில் நிற்கிறார் என்றால் பந்துகளைச் சிதறடித்து அணிக்கு வெற்றி தேடித் தருவார் என்று நம்பலாம். இவரை ரன் மெஷின் என்று வர்ணித்தார்கள். இவரை எப்படி ஆட்டமிழக்கச் செய்வது என்பதை அறியாமல் எதிரணி வீரர்கள் திகைத்துப் போயிருந்த காலத்தில் ஒரு புதிய உத்தியைக் கண்டு பிடித்தனர் இங்கிலாந்து நாட்டினர்.

பாடி லைன் என்று சொல்லப்படும் உடலைக் குறி வைத்து பந்து எறியும் முறையை இவர்கள் ஆரம்பித்தார்கள். இடது பாகம் விழுந்து உடலை நோக்கி வேகமாய் வரும் பந்துகளைச் சமாளிப்பதில் மட்டுமே பிராட்மேன் சற்று தடுமாறுவார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்த முறை பிராட்மேனை அவுட்டாக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டது என்பது கவனிக்கத் தக்கது. இந்த முறை வெற்றியும் பெற்றது. 32 – 33ம் ஆண்டைய தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் பிராட்மேன் சராசரி 56 மட்டுமே.

ஆனால் இந்த பந்து வீச்சு முறை மிகப் பெரிய சர்ச்சையை எழுப்பியது. ஆட்களைக் குறி வைத்து எறியும் முறை வழக்கத்துக்கு மாறானது, இது ஆபத்தானது என்று ஆஸ்திரேலிய அரசு மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இங்கிலாந்து ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையே மிகப்பெரிய பிரச்சனையாக இது உரிவெடுத்ததால் இந்த முறையில் பந்து வீசுதல் சட்ட விரோதமானது என தடை செய்யப்பட்டது.

கிரிக்கெட் விளையாட்டு நாடுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்கிறது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இந்த அணியில் ஆறு தீவுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெறுகிறார்கள். இந்த ஆறு தீவுகளும் கலாச்சார, வாழ்க்கை முறை, நாணயம், ஆட்சி என அனைத்து விதங்களிலும் வேறுபட்டு நின்றாலும் கிரிக்கெட் விளையாட்டில் இவை அனைத்தும் ஒன்று பட்டு நிற்கின்றன.

மேற்கு இந்தியத் தீவுகளுக்கும் கிரிக்கெட் விளையாட்டை ஏற்றுமதி செய்தது இங்கிலாந்து அணி தான். காலனி ஆதிக்கத்திலுள்ள பகுதிகளில் தோட்ட முதலாளிகளின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் இந்த விளையாட்டு முதலில் விளையாடப்பட்டது. பின்னர் இது மற்ற இடங்களுக்கும் பரவியது. எனினும் கிரிக்கெட் விளையாட்டுக்கு வெள்ளையர்களே முன்னிலை வகித்தார்கள்.

முதன் முதலாக மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்குத் தலைமை வகித்த கறுப்பினத்தைச் சேர்ந்தவர் ஃப்ராங்க் ஓரல் என்பவர். இவருடைய வரவே இன அடிமைத்தனத்திலிருந்து அணியை மீட்டது எனலாம். இரண்டாம் உலகப் போருக்குப் பின் மாபெரும் எழுச்சி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 1950ல் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று வியக்க வைத்தது.

கிளைவ் லாயிட் வரவுக்குப் பின் மேற்கு இந்தியத் தீவுகள் அணி உலக அளவில் மிகப்பெரிய கவனத்துக்குள்ளானது. மிகவும் திறமையாக விளையாடி பல்வேறு சாதனைகளையும் வெற்றிகளையும் அவர்கள் குவித்தார்கள். வெறும் ஐம்பது இலட்சம் மக்களைக் கொண்ட மேற்கு இந்தியத் தீவுகள் அணி உலகை அசைக்கும் வலிமையுள்ள அணியாக மாறியது.

கிரிக்கெட்டின் தாக்கம் உலகெங்கும் பரவ ஆரம்பித்தபின் உலக கிரிக்கெட் சங்கம், ஐ.சி.சி 1909ல் ஆரம்பிக்கப் பட்டது. பல்வேறு போட்டிகள் சர்வதேச அளவில் நடத்தப்பட்டன. அதில் மிக முக்கியமான ஒன்று உலகக் கோப்பைக் கிரிக்கெட். இது 1975ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. இந்தியா இந்த கோப்பையை ஒருமுறை கைப்பற்றியுள்ளது. 1983ம் ஆண்டு வரை ஒரு நாள் போட்டிகளுக்கு அறுபது ஓவர்கள். அதன் பின்பே அது ஐம்பதாகக் குறைக்கப் பட்டது.

உலகின் பல நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டாலும் தெற்காசியப் பிராந்திய நாடுகளான இந்தியா, இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தான் இந்த விளையாட்டுக்கு அதிக மரியாதை. அதிலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் நேசிக்கப் படும் விளையாட்டாய் இருக்கிறது. பல கோடிக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பார்க்கும் இந்த விளையாட்டில் இந்தியா தோற்றுப் போனால் பல ரசிகர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், சிலர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகிறார்கள் என்பது அதிர்ச்சித் தகவல்.

இந்தியாவுக்கு டெஸ்ட் அந்தஸ்து ஆறாவதாக வழங்கப்பட்டது. இதன் மூலம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், நீயூசிலாந்து போன்ற அணிகளுடன் அது தன்னை இணைத்துக் கொண்டது.

இங்கிலாந்தை வெல்ல வேண்டும் என்னும் எண்ணம் எல்லா இந்திய வீரர்களின் மனதிலும் அப்போது ஆழப் பதிந்திருந்தது. அந்த வாய்ப்பு 1952 – ல் கிடைத்தது. இந்தியாவில் நடந்த போட்டியில் அது இங்கிலாந்தை வீழ்த்தியது. கண்ணியத்துக்குப் பெயர் போன இந்திய ஊடகங்கள், அந்த கால கட்டத்தில் இங்கிலாந்தின் மன்னர் ஆறாம் ஜார்ஜ் மரணமடைந்தது தான் இங்கிலாந்தின் தோல்விக்குக் காரணம் என எழுத, அடக்கு முறை இங்கிலாந்து நெகிழ்ந்தது.

சர்வதேசப் போட்டிகளிலேயே மிகவும் அதிக ஆர்வமுடன் பார்க்கப்படும் போட்டி எனும் பெருமையை இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் பெற்று விடுகின்றன. இந்த போட்டிக்கு இருக்கும் வரவேற்பும் ஒரு ஆக்ரோஷமான ஆர்வமுமே இதன் காரணம்.

இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து விளையாட்டுகளையும் விட கிரிக்கெட் இன்று மிகவும் புகழ் பெற்ற ஆட்டமாக உருமாறியிருக்கிறது. இதை விளையாட்டு என்று கருதிக் கொண்டாலும் கூட தனி மனித வாழ்க்கைப் பொறுப்புகளை பல வேளைகளில் இது பாதிக்கிறது என்பதும், கிரிக்கெட் நட்சத்திரங்கள் அளவுக்கு அதிகமாக வணங்கப்படுகிறார்கள் என்பதும், இது மிகப்பெரிய வர்த்தகத் தளமாகி சூதாட்டத்தின் இருப்பிடமாகி விட்டது என்பதும் இந்த விளையாட்டின் மீது வைக்கப்படும் சர்ச்சைகளாக உள்ளன. எனினும் விளையாட்டை விளையாட்டாய் பார்த்தால் பிரச்சனை இல்லை என்பதே நிஜம்.